ரஷ்ய அண்மையில் செய்துகொண்ட விண்வெளி நடவடிககைகள் பிரித்தானியாவையும், அமெரிக்காவையும் விசனம் கொள்ள வைத்துள்ளன.
.
கடந்த நவம்பர் மாதம் ரஷ்யா Cosmos 2542 என்ற செய்மதியை ஏவி இருந்தது. இந்த செய்மதிக்குள் இன்னோர் சேய் செய்மதி மறைந்து இருந்துள்ளது. Cosmos 2443 என்ற இந்த சேய் செய்மதி விண்ணில் நகரும் வல்லமை கொண்டது. அந்த வல்லமை மாற்றான் செய்மதிகளுக்கு அருகில் சென்று வேவு பார்க்கவும், தேவைப்பட்டால் தாக்கி அழிக்கும் வல்லமையும் கொண்டது.
.
ஜூலை 15 ஆம் திகதி இந்த சேய் செய்மதி சுமார் 100 meter/sec வேகத்தில் செல்லும் பொருள் ஒன்றை ஏவியதாக அமெரிக்கா கூறுகிறது. அப்பொருள் அமெரிக்காவின் வேவுபார்க்கும் USA-245 க்கு அண்மையில் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஏவப்பட்ட பொருள் என்ன என்பது இதுவரை அறியப்படவில்லை. அமெரிக்கா இதை “Object E” என்று பெயரிட்டு உள்ளது.
.
மேற்படி ஏவல் ஒரு இராணுவ ஒத்திகை என்று அமெரிக்காவும், பிரித்தானியாவும் கருதுகின்றன.
.
மேற்படி பொருள் தமது செய்மதிகளை கண்காணிக்கும் பொருள் என்றும், அது இராணுவ நோக்கம் கொண்டது அல்ல என்றும் கூறி உள்ளது.
.
அமெரிக்கா, ரஷ்யா உட்பட 110 நாடுகள் Outer Space Treaty என்ற இணக்கத்தில் கையொப்பம் இட்டுள்ளன. அந்த இணக்கப்படி விண்ணில் இராணுவ பயன்பாட்டு பொருட்களை நிலைகொள்ள வைக்க முடியாது.
.