Edward Snowden என்ற அமெரிக்கருக்கு ரஷ்யா இன்று திங்கள் குடியுரிமை (citizenship) வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் பிறந்த 75 பேருக்கு பூட்டின் இன்று ரஷ்ய குடியுரிமை வழங்கியுள்ளார். அதில் ஒருவரே 39 வயது கொண்ட Snowden.
2013ம் ஆண்டு ரஷ்யா Snowden னுக்கு அடைக்கலம் வழங்கி இருந்தாலும், குடியுரிமை வழங்கி இருக்கவில்லை. ஆனால் 2020ம் ஆண்டு இவருக்கு ரஷ்யாவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக Snowden கருத்து எதையும் இதுவரை கூறவில்லை.
NSA (National Security Agency) என்ற அமெரிக்காவின் உளவு திணைக்களத்தில் பணியாற்றிய Snowden அமெரிக்கர் மீதான அமெரிக்காவின் சட்டவிரோத உளவு நடவடிக்கைகளை பகிரங்கம் செய்திருந்தார். அதனால் அமெரிக்க அரசு அவர் மீது வழக்குகளை தாக்கல் செய்திருந்தது. அப்போது தப்பியோடிய Snowden பல நாடுகளில் அடைக்கலம் பெற்று இருந்தார்.
ரஷ்ய குடியுரிமையை ஏற்று Snowden ரஷ்யா சென்றால் அவர் யூகிரேனில் சண்டையிட அனுப்பப்படுவாரா என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. இவரின் வயது யுத்தத்துக்கு நயமானது அல்ல என்றாலும் இவர் பெயர் பறை சாற்றலுக்கு உகந்தது. இவரிடம் இராணுவ பயிற்சியும் கைவசம் இல்லை.
இவருக்கும் Lindsay Mills என்ற இவரின் மனைவிக்கும் 2020ம் ஆண்டு பிறந்த குழந்தைக்கு ரஷ்ய கடவுச்சீட்டு உண்டு.