இந்த ஆண்டுக்கான Eurovision பாட்டு போட்டி சுவீடன் நாட்டின் Malmo என்ற நகரில் வரும் மே மாதம் நிகழவுள்ளது. அந்த போட்டியில் இஸ்ரேல் பங்கு கொள்ளலாம் என்று போட்டி அமைப்பாளர் தெரிவித்து உள்ளனர்.
இசை துறையின் முன்னணி பலர் ரஷ்யாவை Eurovision போட்டியில் இருந்து நீக்கியதுபோல் இஸ்ரேலையும் நீக்க வேண்டும் அறிக்கை மூலம் கேட்டிருந்தனர். அந்த அறிக்கையில் ரஷ்யா தான் ஆக்கிரமித்த யூக்கிறேன் மக்களை கொன்று குவித்ததுபோல் இஸ்ரேலும் தான் உள்ள பலஸ்தீனரை கொன்று குவிக்கிறது என்று ஒப்பிட்டு காட்டி இருந்தனர்.
ஆனால் கோவிலில் குடியானவன் செய்யும் குற்றம் குருக்கள் செய்தால் குற்றம் அல்ல என்று கூறுவதுபோல் ரஷ்யா மீது நடைமுறை செய்த சட்டம் இஸ்ரேல் மீது நடைமுறை செய்யப்படாது என்று கூறியுள்ளனர் அமைப்பாளர்.
போட்டி அமைப்பாளர் முன்னர் ரஷ்யாவை அனுமதிப்பது “would bring the competition into disrepute” என்று கூறியே போட்டியில் இருந்து விலக்கி இருந்தது.