ரஷ்யாவை மீறி யூகிறேனுக்கு இந்திய ஆயுதம்

ரஷ்யாவை மீறி யூகிறேனுக்கு இந்திய ஆயுதம்

ரஷ்யாவும் யூகிறேனும் சண்டையிடும் காலத்தில், ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி, இந்திய ஆயுதங்கள் யூகிறேனுக்கு வழங்கப்பட்டுள்ளன என்கிறது Reuters செய்தி நிறுவன செய்தி ஒன்று.

இந்தியா தயாரித்த எறிகணைகள் (artillery shells) இத்தாலி, Czech Republic, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனைசெய்யப்பட, அவற்றை அந்த ஐரோப்பிய நாடுகள் யூகிறேனுக்கு வழங்கி உள்ளன.

உதாரணமாக Yantra தயாரித்த 155mm L15A1 வகை எறிகணை இந்தியாவில் இருந்து இத்தாலி சென்று பின் அங்கிருந்து யூகிறேன் சென்றுள்ளது.

இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் இந்திய ஆயுதங்களை யூகிறேனுக்கு வழங்குவதை தடுக்கும்படி ரஷ்யா இந்தியாவிடம் கேட்டிருந்தது. அவ்வகை மூன்றாம் தரப்புக்கான கைமாற்றத்தை தடுக்கும் உரிமை இந்தியா கொண்டிருந்தும் அது ரஷ்யா விருப்பப்படி செய்யவில்லை.

2022ம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கு முன்னரான 2 ஆண்டுகளில் இந்தியாவின் Yantra, Munitions India, Kalyani ஆகிய 3 ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் $2.8 மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை மட்டுமே மேற்படி நாடுகளுக்கு விற்பனை செய்திருந்தன.

ஆனால் பெப்ரவரி 2022 முதல் ஜூலை 2024 வரையான காலத்தில் அந்த இந்திய நிறுவனங்கள் $135.25 மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை மேற்படி ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளன.