Cold War காலத்தில் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை கொண்டிருந்த கியூபா மெல்ல சீனாவின் பக்கம் நெருங்குகிறது. சீனாவும் தன்னால் முடிந்த உதவிகளை கியூபாவுக்கு செய்கிறது.
கியூபாவின் தலைவர் Miguel Dian-Canel நவம்பர் 25ம் திகதி சீனா சென்று சீ ஜின்பிங் உட்பட பல சீன தலைவர்களை சந்தித்தார். கியூபாவின் உதவி பிரதமரும் கூடவே சீனா சென்றுள்ளார்.
சீனா தான் கியூபாவுக்கு வழங்கிய கடன் விதிகளை கியூபாவுக்கு சாதகமான முறையில் மாற்றி அமைக்க (debt relief) முன்வந்துள்ளது. சீனா மேலும் $100 மில்லின் நன்கொடையை கியூபாவுக்கு வழங்க இணங்கி உள்ளது.
Venezuela வுக்கு அடுத்து சீனாவே கியூபாவின் இரண்டாவது பெரிய வர்த்தக உறவு நாடு.
சீனா கட்டிய புதிய ரயில் சேவை தலைநகர் Havana வில் இருந்து Guantánamo நகரை 9 நகரங்கள் ஊடாக சென்று 15 மணித்தியாலத்தில் அடைகிறது. முன்னர் இந்த தூரத்தை கடக்க சில தினங்களும், பெருமளவு பணமும் தேவைப்பட்டது. தற்போது இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையிலான இருவழி பயணத்துக்கு $8 மட்டுமே தேவை. ஆனாலும் கியூபாவில் சராசரி மாத வருமானம் $40 மட்டுமே.
2030ம் ஆண்டளவில் அனைத்து ரயில் சேவைகளும் புதிப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 1980ம் ஆண்டில் அங்கு சுமார் 5,200 km நீள ரயில் பாதைகள் இருந்தன. ஆனால் தற்போது 5,000 km நீள பாதைகள் மட்டுமே உள்ளன. சுமார் 40 ஆண்டுகளாக கியூபா புதிய பாதைகளை அமைக்கவே, பழைய பாதைகளை திருத்தவோ இல்லை. இதற்கு கியூபா மீதான அமெரிக்க பொருளாதார தடை பிரதான காரணம்.
2019ம் ஆண்டில் கியூபாவுக்கு சுமார் $19.6 பில்லியன் அந்நிய கடன் இருந்ததாக கூறப்படுகிறது.
கியூபாவுள் சோவியத் நுழைவதை விரும்பாத அமெரிக்கா சீனா நுழைவதையும் விரும்பாது.