ரஷ்யாவுக்கு எதிரான கிளர்ச்சியில் அதன் Wagner கூலிப்படை

ரஷ்யாவுக்கு எதிரான கிளர்ச்சியில் அதன் Wagner கூலிப்படை

ரஷ்யாவில் இயங்கும் Wagner Group என்ற தனியார் இராணுவம் இன்று ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி உள்ளது. இதுவரை ரஷ்யா சார்பில் யுகிரேனில் போராடிய இந்த தனியார் இராணுவத்துக்கும் பூட்டினுக்கும் இடையே தற்போது முறுகல் நிலை தோன்றியது. அந்த தனியார் இராணுவம் மாஸ்கோ நோக்கி நகர்கிறது.

தனியார் இராணுவத்தின் கிளர்ச்சியை அடக்க ரஷ்ய அரச படைகளுக்கு உத்தரவு விடுத்துள்ளதாக பூட்டின் கூறியுள்ளார். பூட்டினுக்கு உதவ செச்சென் (Chechen) படைகளும் முன்வந்துள்ளன.

Wagner Group என்ற இந்த தனியார் இராணுவத்தை ஆரம்பித்தவர் Yevgeny Prigozhin என்ற பூட்டினின் நண்பரே.

ரஷ்ய படைகளுக்கும், Wagner படைகளுக்கும் இடையில் சில இடங்களில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. தாங்கள் சரண் அடையப்போவது இல்லை என்று Wagner Group கூறியுள்ளது.

சுமார் 25,000 படையினரை கொண்ட Wagner Group தற்போது Rostov-on-Don என்ற யூக்கிறேன் எல்லையோர ரஷ்ய நகரை கைப்பற்றி உள்ளது.

யூக்கிறேன் யுத்த தோல்விகளுக்கு ரஷ்ய படை அதிகாரிகளை குற்றம் சாட்டுகிறது Wagner Group.