ரஷ்யாவின் hyper-sonic ஏவுகணை?

Missile

ரஷ்யா விரைவில் ஹைப்பர்-சோனிக் (hyper-sonic) ஏவுகணை ஒன்றை ஏவி ஒத்திகை பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த வகை ஏவுகணையை ரஷ்யா கைக்கொள்ளுமாயின் அது அமெரிக்கா உட்பட்ட அனைத்து நாடுகளின் ஏவுகணை எதிப்பு செயல்பாடுகளை முறியடிக்கும்.
.
இவ்வகை ஏவுகணை மணித்தியாலம் ஒன்றில் 7,400 km தூரத்தை கடக்கும். அதாவது இதன் வேகம் ஒலியின் வேகத்தின் 6 மடங்கு அதிகமாக இருக்கும்.
.
Zircon என்ற பெயரின் கீழ் தயாரிக்கப்படும் 5 தொன் எடை கொண்ட இந்த ஏவுகணை வரும் சில மாதங்களில் ஒத்திகை பார்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
.
ரஷ்யா வெற்றிகரமான இவ்வகை ஏவுகணையை தயாரிப்பின் அது அந்நாட்டு ஜனாதிபதி பூட்டினின் கையை ரஷ்யாவிலும், ரஷ்யாவுக்கு வெளியேயும் பலப்படுத்தும்.
.
பிரித்தானியாவின் The Independent பத்திரிகை வெளியிட்ட அறிக்கை ஒன்று, தற்போது பிரித்தானியாவிடம் இருக்கும் கப்பல்கள் மட்டுமல்ல, 2020 ஆம் ஆண்டளவில் சேவைக்கு வரவிருக்கும் HMS Queen Elizabeth மற்றும் HMS Prince of Wales ஆகிய யுத்த கப்பல்களும் Zircon வகை ஏவுகணைகளில் இருந்து தப்பாது என்கிறது. Zircon வகை ஏவுகணையின் வேகத்தின் அரை மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஏவுகணைகளில் இருந்து மட்டுமே மேற்கூறிய இரு கப்பல்களும் தம்மை பாதுகாக்கும் வல்லமை கொண்டிருக்கும்.
.

அமெரிக்காவும் இவ்வகை hyper-sonic ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தாலும், ஒத்திகை செய்யும் அளவுக்கு அந்த முயற்சிகள் வளரவில்லை.
.