ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்துக்கு குறைந்தது 52 சுரங்க தொழிலாளர் பலியாகி உள்ளனர். விபத்தில் இறந்தோரை காப்பாற்ற சென்ற அணியிலும் 6 பேர் மரணித்து உள்ளனர்.
பாதுகாப்புக்கு சென்றோர் கொண்டிருந்த கொள்கலன்களில் (oxygen tank) இருந்த oxygen அளவு குறைந்ததே அவர்களின் மரணத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மொஸ்கோவில் இருந்து சுமார் 3,500 km கிழக்கே உள்ள Listvyazhnaya என்ற இந்த சுரங்கத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்துக்கு மேலும் 49 பேர் காயமடைந்தும் உள்ளார். இதுவரை மொத்தம் 237 சுரங்க தொழிலாளர் மேற்பரப்புக்கு எடுத்துவரப்பட்டு உள்ளனர் என்கிறது அவசரகால அமைச்சு.
அந்த சுரங்கத்தில் விபத்து இடம்பெற்ற நேரம் சுமார் 285 சுரங்க தொழிலாளர் இருந்ததாக கூறப்படுகிறது. ஏனையோரை காப்பாற்றும் முயற்சிகள் தொடர்கின்றன.
2010ம் ஆண்டு ரஷ்ய நிலக்கரி சுரங்க விபத்து ஒன்றுக்கு 91 பேர் பலியாகி இருந்தனர்.