ரஷ்யாவிடம் சிறிய அணு ஏவுகணை?

Russia

கடந்த வியாழக்கிழமை ரஷ்யாவில் ஐந்து அணு ஆயுத பொறியிலாளர் விபத்து ஒன்றில் மரணித்து உள்ளனர். அவர்கள் ஒரு புதிய அணு ஏவுகணை ஒன்றை சோதனை செய்கையிலேயே இந்த விபத்து இடம்பெறுள்ளது. அது என்ன வகை ஆயுதமாக இருக்கும் என்பதை அறிய அமெரிக்காவும், மேற்கும் அவா கொண்டுள்ளன.
.
தலைநகர் மாஸ்க்கோவுக்கு கிழக்கே 370 km தொலைவில் உள்ள Sarov என்ற நகரிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தின் பின், 40 நிமிடங்களுக்கு அங்கு அணு கதிர் வீச்சு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
.
இந்த அணு ஏவுகணை 9M730 Burevestnik என்ற அணு ஏவுகணையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு liquid-fuel ஏவுகணை என்றும் கூறப்படுகிறது.
.
அணு ஆயுதங்கள் ஏற்படுத்தும் அழிவுகள் மட்டுமன்றி அவற்றின் அளவுகளும் பெரியன. சிறிய அளவிலான அணு ஆயுதங்களை தயாரிப்பது கடினம். இங்கு ரஷ்யா சிறிய அணு ஆயுதம் ஒன்றை தயாரிக்கவே ரஷ்யா முயன்றுள்ளது.
.
தற்போதைய பெரிய அணு ஆயுதங்களை எதிரிக்கு தெரியாது மறைப்பது கடினம். ஆனால் சிறிய அணு ஆயுதங்களை எதிரிக்கு அண்மைவரை மறைத்து எடுத்து செல்லலாம்.

.