ரஷ்யாவிடம் உளவுக்கு வெள்ளை திமிங்கிலம்?

Beluga

அண்மையில் நோர்வே நாட்டு மீனவர் ஒருவர் வெள்ளை திமிங்கிலம் (Beluga whale) ஒன்று அதன் கழுத்து பகுதியில் பட்டி ஒன்று அணிந்திருப்பதை கண்டுள்ளார். இந்த பட்டியில் வீடியோ பதிவு செய்யும் கருவிகளை இணைக்க வசதியும் இருந்துள்ளது. அதனால் ரஷ்ய இராணுவம் வெள்ளை திமிங்கிலத்தை உளவு வேலைகளுக்கு பயன்படுத்துகிறதா என்ற சந்தேகம் இப்போது தோன்றி உள்ளது.
.
மேற்படி பட்டியில் “Equipment St. Petersburg” என்ற அடையாளமும் இருந்துள்ளது என்கிறார் நோர்வே நாட்டு மீன்பிடி துறை அதிகாரி Joergen Ree Wiig. இந்த பட்டியை அதிகாரிகள் தமிங்கிலத்தில் இருந்து உடனடியாக மீட்டு உள்ளனர்.
.
இந்த திமிங்கிலம் மனித கட்டுப்பாடில் வளர்ந்து, மனிதர் வழங்கும் உணவில் தங்கி வாழ்ந்தமைக்கான அறிகுறிகளை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதனாலேயே அது மேற்படி மீனவரை நட்புடன் நாடி உள்ளது.
.