Oil India Limited, Indian Oil Corporation Limited, Bharat Petro Resources ஆகிய இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவின் இரண்டு மசகு எண்ணெய் அகழ்வுகளில் சுமார் $3.2 முதலிட இந்திய அரசு இன்று அனுமதி வழங்கி உள்ளது.
.
.
அதன்படி ரஷ்யாவின் அரச நிறுவனமான Vankor oil fieldலில் இந்திய நிறுவனங்கள் $2.02 பில்லியனை முதலீடு செய்யும். இம்முதலீடு மூலம் இந்திய நிறுவனங்கள் Vankor உரிமையில் 23.9% பெரும். இங்கிருந்து இந்தியா 6.56 மில்லியன் மெட்ரிக் எண்ணெயை பெறும்.
.
.
ரஷ்யாவின் Taas-Yuryakh oil fieldலில் $1.24 பில்லியனை முதலீடு செய்வதன் மூலம் இந்திய நிறுவனங்கள் அந்த அகழ்வின் 29.9% உரிமையை பெரும். இங்கிருந்து இந்தியா 1.5 மில்லியன் மெட்ரிக் எண்ணெயை பெறும்.
.
.
தற்போது இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் பாவனை நாடாகும். தனது எண்ணெய் பாவனையின் 75% பங்கை இந்தியா இறக்குமதி செய்கிறது.
.