வெள்ளி இரவு வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்ட Mahalaxmi Express என்ற ரயிலில் இருந்து 1,050 பயணிகள் மீட்க்கப்பட்டு உள்ளனர். இந்தியாவின் மும்பாய் நகருக்கு அண்மையில் உள்ள Vangani என்ற சிறுநகருக்கு அண்மையிலேயே இந்த ரயில் வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டது.
.
பயணிகளை ரயிலிலேயே தொடர்ந்தும் இருக்குமாறு கூறியிருந்தாலும், சுமார் 15 மணித்தியாலங்கள் நீர், உணவு இல்லாத காரணத்தால் பயணிகள் வள்ளங்கள் மூலம் மேட்டு நிலங்களை அடைந்து உள்ளனர்.
.
Badlapur, Ulhasnagar, Vangani ஆகிய பகுதிகள் பெருமளவில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன என்று கூறப்படுகிறது.
.
இதுவரை சுமார் 600 பேர் தென்னாசியாவில் வெள்ளம் காரணமாக பலியாகி உள்ளனர்.
.