ரம்ப் மீது சூடு, இருவர் பலி 

ரம்ப் மீது சூடு, இருவர் பலி 

முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்பை படுகொலை செய்யும் நோக்கில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று Pennsylvania மாநிலத்து Butler நகரில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சனாதிபதி தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசிய ரம்ப் மீது பட்ட குண்டு வலது காதோரம் மட்டும் சிறிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூட்டை அமெரிக்கா புலனாய்வு போலீசான FBI படுகொலை முயற்சி என்று கூறியுள்ளது.

மேடையில் பேசிக்கொண்டிருந்த ரம்ப் குண்டு தாக்கியவுடன் தனது வலது கையால் காயத்தை தடவி பார்த்தபடி குனிந்து கொண்டார். சில குண்டு சத்தங்கள் தொடர ஏனையோரும் குனிந்து கொண்டனர்.

இந்த சூட்டை செய்தது Thomas Matthew Crooks என்ற 20 வயது இளைஞன் என்று கூறப்படுகிறது. இந்த இளைஞனும், இன்னோர் நபரும் பலியாகி உள்ளனர். மேலும் இருவர் காயமடைந்து உள்ளனர்.

சந்தேக நபரான Thomas Matthew Crooks ஒரு பதிவு செய்த ரம்ப் (Republican) கட்சி உறுப்பினர் என்றும் ஆனால் Democratic கட்சிக்கு சிறு தொகை நன்கொடை செய்தவர் செய்தவர் என்றும் கூறப்படுகிறது.