ரம்ப் திட்டத்தை ஐ.நா. 128 வாக்குகளால் நிராகரிப்பு

UN_Israel_Palestinian

அமெரிக்காவின் ரம்ப் அரசின் இஸ்ரவேலுக்கான தூதுவராலயத்தை ஜெருசலேமுக்கு நகர்த்தும் தீர்மானத்தை கண்டித்து இன்று ஐ.நா.வின் பொது அமர்வில் (General Assembly) இடம்பெற்ற வாக்கெடுப்பில் 128 வாக்குக்குள் அமெரிக்காவின் திட்டத்துக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ளன. ஐ.நா. தீர்மானம் இவ்வாறு அமெரிக்க திட்டத்தை கண்டிப்பதை எதிர்த்து அமெரிக்கா, இஸ்ரேல், Guatemala, Honduras, Marshall Islands, Micronesia, Nauru, Palau, Togo ஆகிய 9 நாடுகள் எதிர்த்து வாக்களித்து உள்ளன.
.
மொத்தம் 35 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துள்ளன. அவுஸ்திரேலியா, கனடா, மெக்ஸிகோ, பிலிப்பீன்ஸ், போலந்து, ரூமேனியா ஆகிய நாடுகள் வாக்களிப்பை தவிர்த்த நாடுகளுள் அடங்கும்.
.
மேற்றபடி தீர்மானம் 15 உறுப்பினர்களை கொண்ட Security Councilலில் திங்கள் வாக்கெடுப்புக்கு விடுத்தபோது 14 வாக்குகள் ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாக இருந்தன. ஆனால் veto வாக்கு கொண்ட அமெரிக்கா நிராகரித்து இருந்தது. Security Council தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட 5 veto வாக்கு நாடுகளும் ஆதரவாக வாக்களித்தல் வேண்டும்.
.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 128 நாடுகளுள் அடங்கும். மொத்தம் 5 veto வாக்கு கொண்ட நாடுகளில் அமெரிக்கா தவிர சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய 4 நாடுகளும் ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாகவே வாக்களித்து உள்ளன.
.

ஐ.நா.வின் பொது அமர்வு தீர்மானங்கள் வலு அற்றன. அவை வெறும் தீர்மானங்கள் மட்டுமே. அந்த தீர்மானங்களை ஐ.நா. நடைமுறை செய்யவேண்டிய அவசியம் இல்லை.
.