அமெரிக்க சனாதிபதி ரம்பும், அமெரிக்க உதவி சனாதிபதி வன்சும் யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கியுடன் பத்திரிகையாளர் முன்னிலையில் என்றுமில்லாதவாறு வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதத்தின் பின் செலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். தொடரவிருந்த நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன.
தானும், ரஷ்ய சனாதிபதி பூட்டினும் சமாதானத்தை விரும்புவதாகவும் ஆனால் செலன்ஸ்கி யுத்தத்தை தொடர விரும்புவதாகவும் ரம்ப் செலன்ஸ்கி மீது குற்றம் கூறியுள்ளார். செலன்ஸ்கி மூன்றாம் உலக யுத்தத்தை விரும்புவதாகவும் ரம்ப் சாடியுள்ளார்.
ஆனால் ரஷ்யாவே தமது நாட்டை ஆக்கிரமித்து உள்ளதாக செலன்ஸ்கி கூறினார்.
இந்த மோதல் காரணமாக செக்கன்ஸ்கியின் ரம்புடனான பேச்சுக்கள் முறிந்துள்ளன. அதனால் ரம்ப் கனவு கண்ட யூக்கிறேனின் கனியங்களை பெறும் உடன்படிக்கையும் கையொப்பமிடப்படவில்லை.
ரம்புடனான செலன்ஸ்கியின் மோதலின் பின் கனடாவும், ஐரோப்பிய நாடுகளும் செலன்ஸ்கிக்கு தமது ஆதரவை தெரிவித்து உள்ளனர். கனடிய பிரதமர் ரூடோ, பிரெஞ்சு சனாதிபதி மகிறோன், பிரித்தானிய பிரதமர் Starmer, போலந்து பிரதமர் Tusk, ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் Baerbock, ஸ்பானிஸ் பிரதமர் Sanchez, லிதுவேனியா சனாதிபதி Nauseda, எஸ்டோனியா வெளியுறவு அமைச்சர் Tsahkna ஆகியோர் செலன்ஸ்கிக்கும், யூக்கிறேனுக்கும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் நெருக்கமாக இருந்த ‘மேற்கு’ ரம்ப் ஆட்சிகளில் பாரிய அளவில் முறிந்து வருகிறது.