இதுவரை காலமும் அமெரிக்காவின் ஆதரவை கையில் கொண்டு சிரியாவின் ஆட்சியில் உள்ள அசாத்துக்கும் (Assad) அவரின் அரச படைகளுக்கும் எதிராக யுத்தம் புரிந்துவந்த SDF (Syrian Democratic Forces) என்ற Kurdish ஆயுத குழு தற்போது தனது எதிரியையே உதவிக்கு அழைத்துள்ளது.
.
அமெரிக்க சனாதிபதி ரம்ப் தீடீரென SDF க்கு ஆதரவு வழங்கி வந்த அமெரிக்க படைகளை துருக்கி-சிரியா எல்லையில் இருந்து பின்வாங்கியதே SDF குழுவின் இந்த நகர்வுக்கு காரணம்.
.
அமெரிக்க படைகள் விலகிய பின்னர், துருக்கி தனது படைகளை SDF மீது ஏவியது. துருக்கியின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே SDF சிரியாவின் அரச படைகளின் உதவியை நாடியது.
.
வெளியாரை நம்பி யுத்தத்துக்கு சென்று அழிந்த ஆயுத குழுக்களில் தற்போது SDF குழுவும் அடங்குகிறது.
.