ரம்ப், கியூபா மோதல், ஐரோப்பா நெருக்கடியில்

Cuba-Am

புதன் கிழமை அமெரிக்காவின் ரம்ப் அரசு கியூபா மீது தாக்கல் ஒன்றை தொடரவுள்ளது. அதனால் ஐரோப்பிய நாடுகளும், கனடாவும் புதிய நெருக்கடியில் மூழ்கவுள்ளன.
.
1996 ஆம் ஆண்டில், அப்பா புஷ் காலத்தில், அமெரிக்காவில் Helms-Burton Act என்ற ஒரு புதிய சட்டம் உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த சட்டப்படி கியூபாவில் இழப்புகளை அடைந்த கியூபன்-அமெரிக்கர் கியூபா மீதும், அந்நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிறநாட்டு நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடரலாம்.
.
இந்த சட்டத்தால் விசனம் கொண்ட கனடா போன்ற நாடுகள் உருவாக்கிய எதிர்ப்பால், Helms-Burton சட்டம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. கிளின்டன், மகன் புஷ், ஒபாமா ஆகிய 3 ஜனாதிபதிகளும் தொடர்ந்து இடைநிறுத்தம் செய்து வந்தனர்.
.
ஆனால் ரம்ப் மேற்படி சட்டத்தை புதன் கிழமை முதல் நடைமுறை செய்யவுள்ளார். அதனால் விசனம் கொண்டுள்ளன ஐரோப்பிய நாடுகள். கியூபாவில் வர்த்தகம் செய்யும் தமது நாட்டு நிறுவனங்கள் பாதிப்பு அடைந்தால், ஐரோப்பிய நாடுகள் பதில் வழக்குகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. கனடா இது தொடர்பாக கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
.
கியூபா சுமார் 20,000 இராணுவத்தை வெனிசுவேலாவுக்கு அனுப்பி, அங்கு ஆட்சியில் உள்ள அமெரிக்க எதிர்ப்பு அரசை பாதுகாக்கிறது என்று அமெரிக்கா விசனம் கொண்டுள்ளது. கியூபா, வெனிசுவேலா, நிக்கராகுவா ஆகிய நாடுகளில் ஆட்சி கவிழ்ப்பு செய்ய விரும்புகிறது ரம்ப் அரசு.

.