அமெரிக்க சனாதிபதி ரம்ப் டெல்கி செல்லமுன், அங்கு இடம்பெற்ற ஆர்பாட்டங்களுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். பலியானோருள் ஒருவர் போலீசார், மற்றைய மூவரும் ஆர்பாட்டக்காரர்கள்.
.
மரணித்த பொலிஸாரின் பெயர் Ratan Lal என்று கூறப்படுகிறது. கல்லெறிக்கு ஆளாகியே இந்த போலீசார் மரணித்து உள்ளார்.
.
மேற்படி ஆர்ப்பாட்டம் சர்சைக்குரிய CAA (Citizenship Amendment Act) சட்டத்தை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டதே.
.
ஆர்பாட்ட இடங்களில் கடைகள், வாகனங்கள் ஆகிய பல உடமைகளும் தீக்கு இரையாகி உள்ளன.
.
இன்று திங்கள் ரம்பும், மனைவியும் தாஜ்மகால் சென்று இருந்தனர். அதற்கு முன்னர் குயாரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஒன்றில் சுமார் 100,000 மக்கள் முன்னிலையில் ரம்புக்கு பெரிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்று இருந்தது.
.
செவ்வாக்கிழமை சுமார் $3 பில்லியன் வெகுமதியாக அமெரிக்க ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் உடன்பாடுகளும் செய்யப்படவுள்ளதாக ரம்ப் கூறியுள்ளார்.
.