அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் அவையில் இருந்த வல்லமை கொண்ட இறுதி நபரும் தனது பதவியை விட்டு விலகுகிறார். கடந்த இரண்டு வருடங்களாக பாதுபாப்பு செயலாளராக (US Defense Secretary) இருந்த ஜெனரல் Jim Mattis வரும் பெப்ருவரி மாத இறுதியுடன் தனது பதவியை விட்டு விலகுவதாக கூறியுள்ளார்.
.
ரம்புடம் இணைந்து தொழில் புரிய முடியாத பல தரமான உறுப்பினர்கள் ஏற்கனவே ரம்பை விட்டு விலகி இருந்தனர். சிலர் பின்னர் ரம்பால் வசைபாடப்பட்டும் இருந்தனர்.
.
பல விடங்கள் Trump, Mattis இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி இருந்தாலும், நேற்று ரம்ப் அமெரிக்க படைகளை சிரியாவில் இருந்து திருப்பி அழைக்க தீர்மானம் எடுத்தது இறுதி முரண்பாடாக அமைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
.
Jim Mattis அமெரிக்காவின் ஒரு 4-star Marine ஜெனரலாக பதிவியில் இருந்து ஓய்வு பெற்றவர். 2016 ஆம் ஆண்டு ரம்ப் ஜனாதியபதியாக தேர்தலில் வென்றபின், தனது அவைக்கு தெரிவு செய்த முதலாவது உறுப்பினர் Jim Mattis ஆவார்.
.
Mattis இராணுவத்தில் இருந்து விலகியது 2013 ஆம் ஆண்டில் என்பதாலும், இராணுவ அதிகாரிகள் பதவி விலகி 7 வருடங்களின் பின்னரே பாதுகாப்பு செயலாளர் பதவியை அடைய முடியும் என்பதாலும், Mattis விசேட Congress அனுமதி மூலமே பாதுகாப்பு செயலாளர் பதவியை பெற்றிருந்தார்.
.