ரம்பை பதவி விலக்க impeachment விசாரணை

Trump

அமெரிக்க சனாதிபதி ரம்பை பதவியில் இருந்து விரட்டும் நோக்கில் எதிர் கட்சியான Democratic கட்சி ரம்ப் மீது impechment விசாரணையை ஆரம்பித்துள்ளது. Joe Biden, அவரது மகன் Hunter Biden மீது விசாரணைகள் செய்யுமாறு ரம்ப் சட்டவிரோதமாக யுக்கிரைன் ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கியதே காரணம்.
.
சனாதிபதி போன்ற மிக உயர்ந்த பதவிகளில் உள்ளோர் தவறு செய்யும்போது அவர்களை பதவியில் இருந்து விரட்ட கொண்டுள்ள விசாரணை முறையே impeachment.
.
இதுவரை அமெரிக்காவின் வரலாற்றில் Andrw Johnson (1865-1869), Bill Clinton ஆகிய 2 சனாதிபதிகள் மீது impeachmnet விசாரணைகள் இடம்பெற்று உள்ளன. இரண்டு விசாணைகளும் Senate ஆல் கைவிடப்பட்டு இருந்தன.
.
தற்போது அமெரிக்காவின் House of Representative என்ற அவையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள Democratic கட்சியால் ஆரம்பிக்கப்படும் ரம்ப் மீதான impeachmnet விசாரணை இடைவழியில் நின்றுபோகலாம். போதிய அளவு Republican கட்சி உறுப்பினர்களும் ரம்பை கைவிட்டாலே ரம்ப் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
.