அமெரிக்காவின் ரம்ப் அரசு ஜூலை 6 ஆம் திகதி விடுத்த F-1, M-1 மாணவ விசாக்களின் கட்டுப்பாடுகளை எதிர்த்து அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகங்களான ஹார்வர்ட், MIT ஆகியன நீதிமன்றம் செல்கின்றன.
.
முறைப்படி F-1, M-1 விசா மூலம் அமெரிக்கா செல்லும் மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு நேரடியாக சென்றே கல்வி கற்க வேண்டும். வீட்டில் இருந்து internet மூலம் கற்க முடியாது. ஆனால் அண்மையில் வந்த கரோனா மாணவர் நேரடியாக கலந்துகொள்ளும் வகுப்புகளையும் internet மூலம் தொடர கட்டாயப்படுத்தியது. இச்செயல் F-1, M-1விசா விதிகளுக்கு முரண் ஆகியது.
.
இந்த முரண்பாட்டை சாதகமாக பயன்படுத்தி ரம்ப் அரசு வெளிநாட்டு F-1, M-1 விசா மாணவர்களை வெளியேற்ற முனைந்தது. அதை எதிர்த்தே மேற்படி பல்கலைக்கழகங்கள் நீதிமன்றம் செல்கின்றன.
.
ஏற்கனவே சில ஆண்டுகளையும், பெருமளவு பணத்தையும் செலவழித்த F-1, M-1 விசா மாணவர்கள் தமது படிப்பை முடிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்பதே மேற்படி கல்வி நிலையங்களின் வாதம்.
.
ஹார்வர்ட் மாணவர் பத்திரிகையான The Harvard Crimson மேற்படி வழக்கு Boston நகரில் உள்ள district court ஒன்றில் புதன்கிழமை (ஜூலை 8th) பதியப்பட்டதாக கூறுகிறது.
.