அமெரிக்க சனாதிபதி ரம்புக்கு எதிராக அவரின் உள்வீட்டு உறவுகள் பலர் எழுந்து உள்ளனர். இவர்களுள் ரம்பின் Rebulican கட்சி உறுப்பினர்களும், ரம்பின் உறவினரும் அடங்குவர். இந்த உள்வீட்டு எதிரிகளின் எதிர்ப்பு எதிர் கட்சியான Democratic கட்சியினரின் எதிர்ப்பிலும் உக்கிரமானது.
.
ஜூலை மாதம் 28 ஆம் திகதி 55 வயதான Mary L. Trump (ஒரு psychologist) என்ற உறவினர் எழுதிய Too Much and Never Enough: How My Family Created the World’s Most Dangerous Man என்ற புத்தகம் வெளிவர உள்ளது. சனாதிபதியின் இன்னோர் சகோதரன் Robert Trump இந்த வெளியீட்டை தடை செய்ய நீதிமன்றை கேட்டிருந்தாலும், நீதிமன்றம் நேற்று ஜூலை 1 ஆம் திகதி அவ்வாறு புத்தகத்தை தடை செய்ய மறுத்துள்ளது.
.
Mary யின் வெளியீடு ரம்ப் குடும்ப விசயங்களை பகிரங்கப்படுத்த உள்ளது. குறிப்பாக Mary யின் தகப்பனாரான Fred Trump Jr. க்கும் (சனாதிபதியின் மூத்த சகோதரர்), சனாதிபதி ரம்புக்கும் இடையில் நிலவிய முரண்பாடுகள் பகிரங்கத்து வர உள்ளன. Mary யின் 16 வயதில் (1981 ஆம் ஆண்டு) தந்தை (சனாதிபதியின் மூத்த சகோதரன்) Fred Jr. மரணித்து இருந்தார்.
.
Mary யின் பாட்டனார், சனாதிபதியின் தந்தை, Fred Sr. 1999 ஆம் ஆண்டு மரணித்து இருந்தார். பாட்டனாரின் மரணத்தின் பின், தந்தை இல்லாத நிலையில், Mary பரம்பரை சொத்துக்களுக்குகாக சனாதிபதி ரம்புடன் மோத வேண்டியிருந்தது. இந்த விசயங்கள் எல்லாம் Mary யின் புத்தகத்தில் வரவுள்ளன.
.
மறுபுறம் சனாதிபதி ரம்பின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் John Bolton ஏற்கனவே The Room Where It Happened மூலம் ஜனாதிபதியை வன்மையாக சாடி வருகிறார். அந்த வெளியீட்டையும் ரம்ப் தடைசெய்ய முனைந்து தோல்வி அடைந்திருந்தார்.
.
அதேவேளை முன்னாள் Republican சனாதிபதியான புஷ்ஷின் கீழ் வெள்ளைமாளிகையில் பணியாற்றிய 43 உயர் அதிகாரிகள் Democratic கட்சி வேட்பாளர் பைடெனுக்கு (Biden) ஆதரவு வழங்க முன்வந்து உள்ளனர்.
.
அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கு சுமார் 4 மாதங்கள் மட்டும் இருக்கையில் ரம்ப் இரண்டாம் தடவை சனாதிபதியாக வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பம் அருகி வருகிறது.
.