ரம்புக்கு அடிபணிய மறுக்கும் அமெரிக்க Harvard University

ரம்புக்கு அடிபணிய மறுக்கும் அமெரிக்க Harvard University

அமெரிக்க சனாதிபதி ரம்பின் பலமுனை மிரட்டல்களுக்கு அடிபணிய மறுக்கிறது Harvard University. ஏற்கனவே அமெரிக்காவின் Columbia University ரம்பின் மிரட்டல்களுக்கு அடிபணிந்தாலும் ஹார்வர்ட் தனது சுதந்திரத்தை இழக்க மறுக்கிறது.

ரம்ப் அரசு ஏப்ரல் 11ம் திகதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் ரம்ப் அரசின் விருப்பத்துக்கு ஏற்ப பாடங்களை அமைக்கும்படியும், மாணவர்களை அனுமதிக்கும் முறைமையை மாற்றி அமைக்கும்படியும், பலஸ்தீனர் ஆதரவு போராட்டங்களை தடுக்கும்படியும் கேட்டிருந்தது.

Columbia பல்கலைக்கழகத்திடமும் இவ்வாறு கேட்கப்பட்டு, கொலம்பியாவும் தனது சுதந்திரத்தை இழந்து ரம்ப் அரசின் விருப்பத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டது. ஆனால் ஹார்வர்ட் மறுக்கிறது.

ஹார்வர்ட் தலைவர் Alan Garber தனது பதிலில் “University will not surrender its independence or relinquish its constitutional rights” என்று கூறியுள்ளார்.

ஹார்வர்ட் ரம்புக்கு பணிய மறுப்பதால் ரம்ப் கடந்த திங்கள் ஹார்வர்டுக்கு வழங்க இருந்த $2.2 பில்லியன் நன்கொடையை இடைநிறுத்தி இருந்தார்.