ரம்பின் புதிய குரைப்பு; BRICS நாடுகள் மீது 100% வரி 

ரம்பின் புதிய குரைப்பு; BRICS நாடுகள் மீது 100% வரி 

அமெரிக்காவின் அடுத்த சனாதிபதி ரம்ப் இன்று சனிக்கிழமை மீண்டும் ஒரு குரைப்பை செய்துள்ளார். BRICS நாடுகள் அமெரிக்க டாலர் பாவனையை தவிர்த்து வேறு நாணயங்களை பயன்படுத்த முனைந்தால் அந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பொருட்களுக்கு தான் 100% இறக்குமதி விதிக்கவுள்ளதாக ரம்ப் குரைத்துள்ளார்.

தற்போது BRICS அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, UAE ஆகிய 9 நாடுகள் அங்கம் கொண்டுள்ளன. இலங்கை உட்பட மேலும் பல நாடுகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

அவர் தனது பதிவு ஒன்றில்  “We require a commitment from these Countries that they will neither create a new BRICS Currency, nor back any other Currency to replace the mighty U.S. Dollar or, they will face 100% Tariffs, and should expect to say goodbye to selling into the wonderful U.S. Economy,” என்று கூறியுள்ளார்.

சீனா உட்பட பல நாடுகள் அமெரிக்க டாலரில் தங்கியிருப்பதை தவிர்க்க முனைவது அமெரிக்காவுக்கு எவ்வளவு மிரட்டலாக அமைந்துள்ளது என்பது இதில் இருந்து தெரிகிறது.

ரம்பின் இந்த மிரட்டல் பிரித்தானிய பௌண்ட்ஸ், ஐரோப்பிய யூரோ ஆகியவற்றின் பயன்பாட்டுக்கும் விடுத்த மிரட்டலா என்று அவர் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. அவர் அப்படி அளந்து கதைப்பவரும் அல்ல.