முன்னாள் அமெரிக்க சனாதிபதியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி $2.5 பில்லியனாக குறைந்துள்ளது என்கிறது Forbes magazine. அதனால் ரம்ப் Forbes 400 என்ற அமெரிக்காவின் முதல் 400 செல்வந்தர் என்ற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
சனாதிபதி ஆகுமுன், 2016ம் ஆண்டு ரம்பிடம் $3.7 பில்லியன் சொத்துக்கள் இருந்துள்ளன. 2017ம் ஆண்டு அத்தொகை $3.1 ஆக குறைந்து உள்ளது. வீழ்ச்சி 2021 வரை தொடர்ந்து உள்ளது. இவர் தனது சொத்துக்களை பெருமளவில் கட்டிடங்களில் மட்டும் கொண்டுள்ளதே வீழ்ச்சிக்கு காரணம் என்று கருதப்படுகிறது.
1996ம் ஆண்டு முதல் கடந்த 25 ஆண்டுகளாக Forbes 400 பட்டியலில் இடம் கொண்டிருந்த ரம்ப் இந்த ஆண்டே அந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
Forbes 400 பட்டியலின்படி அமெரிக்காவின் முதல் செல்வந்தராக Amazon நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezo உள்ளார். இவரின் சொத்துக்களின் பெறுமதி $201 பில்லியன் என்று கூறப்படுகிறது. இதில் பெருமளவு பங்குச்சந்தை பங்குகளே.
இரண்டாவதாக Paypal, Tesla ஆகிய நிறுவனங்களை ஆரம்பித்த Elon Musk உள்ளார். இவரின் சொத்துக்களின் பெறுமதி $190.5 பில்லியன். இவரின் சொத்துக்களில் பெருமளவு Tesla பங்குச்சந்தை பங்குகளில் உள்ளது. மூன்றாவதாக Facebook நிறுவனத்தின் Mark Zuckerberg உள்ளார். இவரின் சொத்துக்கள் $134.5 பில்லியன்.