முன்னாள் சனாதிபதி ரம்ப் ஆட்சிக்கு வருமுன் செய்த பரப்புரைகளில் ஒன்று “Build That Wall”. அதாவது ரம்ப் அமெரிக்க-Mexico எல்லை முழுவதும் எல்லை சுவர் கட்டி அகதிகள் அமெரிக்காவுள் நுழைவதை தடுக்க விரும்பினார்.
அக்காலத்தில் ரம்பின் திட்டத்தை நிராகரித்து பரப்புரை செய்திருந்தார் Democratic கட்சி சார்பில் போட்டியிட்ட பைடென். எல்லை சுவர் மனிதாபிமானம் அற்றது என்று கூறியிருந்தார்.
சனாதிபதி பதவியை வென்ற உடனேயும் பைடென் அமெரிக்க வரிப்பணத்தில் எல்லை சுவர் கட்ட முடியாது என்று ஒரு proclamation செய்திருந்தார்.
ஆனால் இன்று வியாழன் அகதிகள் நுழைவதை தடுக்க மேலும் எல்லை சுவர் அமைக்க உள்ளதாக பைடென் கூறியுள்ளார். இதை அறிந்த ரம்ப் தன்னிடம் பைடென் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுள்ளார்.
சுமார் 73% Republican கட்சி சார்பு அமெரிக்கரும், 37% Democratic கட்சி சார்பு அமெரிக்கரும் மிகையான அகதிகள் வருகையால் விசனம் கொண்டுள்ளனர்.
தடுப்பு இல்லாத எல்லைகள் ஊடாக பெருமளவு அகதிகள் அமெரிக்காவுள் நுழைகின்றனர்.