ரம்பின் கரோனா கருத்தை அஸ்ரேலிய தூதரகம் கசிய விட்டது?

Australia

அமெரிக்க சனாதிபதி ரம்பின் கரோனா தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்க மக்கள் வெறுப்பு கொண்டிருக்கும் நிலையில், விசயத்தை திசை திருப்பும் நோக்கில் ரம்ப் கரோனா வூஹான் ஆய்வுகூடம் ஒன்றில் இருந்து வெளியேறியது என்ற கருத்தை பரப்பி வருகிறார்.
.
ஆனால் மேற்படி கருத்து அமெரிக்க, ஐரோப்பிய ஆய்வாளர்களால் மறுக்கப்படுள்ளது. ஐ. நாவின் WHO அமைப்பும் அந்த கருத்தை மறுத்து உள்ளது.
.
தனது கருத்தை உலகம் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ரம்ப் தன கருத்தை அஸ்ரேலியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் கசிய விட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. கசிந்த இந்த கருத்தை Sydney Morning Herald வியாழக்கிழமை பிரசுரித்து உள்ளது. அந்த கருத்தை ஆய்வு என்று பிரசுரித்து இருந்தாலும், உண்மையில் ஆய்வுகள் எதையும் குறிப்பிட்டு இருக்கவில்லை.
.
அமெரிக்காவின் இச்செயல் அஸ்ரேலியாவின் சுதந்திரமான ஆய்வுகளை சந்தேகத்துக்கு உள்ளாக்கும் என்று கவலை கொண்டுள்ளார் அஸ்ரேலிய ஆய்வாளர் Richard McGregor.
.
அமெரிக்கா செய்ததை சீனா செய்திருந்தால் அந்த செயல் அரசியல் தலையீடு என்று கூறப்பட்டு இருக்கும் என்று முன்னாள் அஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் Bob Carr கூறி உள்ளார்.
.
திங்கள்கிழமை Daily Telegraph என்ற பத்திரிகையும் US, Australia, Britain, Canada, New Zealand ஆகிய நாடுகள் சில இணைந்து தொகுத்த 15 பக்கங்கள் கொண்ட ஆய்வு ஒன்றை பிரசுரித்து உள்ளது. அதை எழுதிய Sharri Markson என்பவர் பிரசுரத்தின் மூலங்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
.