ரம்பின் கரோனாவால் மேலும் குழம்பிய அமெரிக்கா

சனாதிபதி ரம்பையும் (வயது 74) கரோனா தொற்றியதால் அமெரிக்காவின் அரசியல் சூழ்நிலை மேலும் குழப்பம் அடைந்து உள்ளது. கரோனா தொற்றினாலும், தற்போதும் ரம்பே சனாதிபதியாக பதவி வகிக்கிறார். ஆனால் அவர் மேலும் பலவீனம் அடைந்தால் எவ்வாறு நிலைமையை கையாள்வது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சட்டப்படி உதவி சனாதிபதி தற்காலிக சனாதிபதியாக செயல்படுவர். ஆனால் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில் ரம்ப்  பங்கு கொள்ள முடியாது இருக்கும்.

தற்போதை அபிப்பிராய வாக்கெடுப்புகளின்படி Democratic கட்சியை சார்ந்த பைடென் 51% ஆதரவை கொண்டுள்ளார். ரம்ப் 43% ஆதரவை மட்டுமே கொண்டுள்ளார். அதன்படி பைடென் 8% மேலதிக ஆதரவை கொண்டுள்ளார். ஏறக்குறைய இந்நிலை கடந்த 0 மாதங்களாக தொடர்கிறது. பைடென் வென்றால் நிலைமை குழம்பும் இன்றி முடியும்.

அத்துடன் Ruth Bader என்ற அமெரிக்க Supreme Court நீதிபதியின் மரணத்தின் பின் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு Amy Coney Barrett என்ற தமது வலதுசாரி நீதிபதியை விரைந்து நியமிக்க ரம்ப் முனைந்து இருந்தார். தற்போது அந்த நியமனமும் கேள்விக்குறியில் உள்ளது.
ரம்பின் வர்த்தக, அரசியல் பேச்சுவார்த்தைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படலாம்.