வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் ரம்பின் உதவி சனாதிபதியாக போட்டியிட JD வான்ஸ் (James David Vance) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதனால் ரம்ப் தேர்தலில் வென்றால் வான்ஸ் உதவி சனாதிபதி ஆவார்.
2016ம் ஆண்டு ரம்ப் முதலில் சனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட காலத்தில் ரம்பின் கொள்கைகளை “immoral to absurd”, “cultural heroin”, “opioid of the masses” என்றெல்லாம் இவர் சாடியிருந்தார். தன்னை ஒரு “never-Trump guy” என்று விபரித்த இவர் ரம்பை “America’s Hitler” என்றும் கூறியிருந்தார்.
ஆனால் ரம்ப் வென்றபின் இவர் ரம்பின் ஆதரவாளர் ஆகினார். இவர் 2022ம் ஆண்டு Senate போட்டியில் இறங்கிய போது ரம்ப் ஆதரவு வழங்க வான்ஸ் Ohio மாநில Senator ஆகினார்.
வான்ஸ் எழுதிய Hillbilly Elegy என்ற புத்தகம் (memoir) பெருமளவில் விற்பனை செய்யப்பட்டது. இவர் அமெரிக்காவின் marine படையில் சேவை செய்தவர். இவரின் மனைவி Usha Vance இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற Chilukuri குடும்பத்தில் பிறந்தவர்.
Bowman குடும்பத்தில் பிறந்த இவரின் பெற்றோர் இவர் குழந்தையாக இருக்கையில் விவாகரத்து செய்தனர். பின் தாயின் மூன்றாம் கணவர் இவரை தத்தெடுத்தார். ஆனால் தாய் போதைக்கு அடிமையாக இவரை Vance என்ற பாட்டனார் வளர்த்தார்.