ரம்பின் ஆதரவில் பூட்டின் தப்பிக்கலாம்

ரம்பின் ஆதரவில் பூட்டின் தப்பிக்கலாம்

சனாதிபதி ரம்பின் ஆதரவுடன் ரஷ்ய சனாதிபதி யூக்கிறேன் விசயத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. ரம்ப் ரஷ்யாவின் பூட்டினுடன் புதன்கிழமை தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். அத்துடன் இருவரும் சவுதியில் நேரடியாகவும் சந்திக்க சந்தர்ப்பமும் அதிகரித்துள்ளது.

பூட்டினுடன் உரையாடிய பின் ரம்ப் யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கியுடனும் தொலைபேசியில் உரையாடி உள்ளார். ரம்ப் முயற்சிகள் யூக்கிறேனுக்கு பாதகமாக அமையலாம். 

ஏற்கனவே ரஷ்ய கைப்பற்றிய கிரைமியா மற்றும் கிழக்கு யூக்கிறேன் (டொன்பாஸ்) பகுதிகளை பூட்டின் கைவிடப்போவதில்லை. அதனால் அவற்றை யூக்கிறேன் நிரந்தரமாக இழக்கும் நிலை ஏற்படலாம். அத்துடன் யூக்கிறேனுக்கு NATO அங்கத்துவம் வழங்கப்படாது என்றும் ரம்ப் அரசு கூறியுள்ளது. ரஷ்யா மீதான தடைகளை ரம்ப் கைவிடவும்கூடும். ரம்ப் அவ்வாறு செய்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு அது நெருக்கடியாக அமையலாம்.

யூக்கிறேன் NATO வில் இணைய முயற்சித்ததாலேயே அதை தடுக்க ரஷ்ய யூக்கிறேனுள் நுழைந்தது. தற்போது இந்த யுத்த அழிவுகள் விரையமாகவுள்ளன.

ரம்ப் தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக சவுதிக்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது. அங்கு பூட்டினும் சென்று இருவரும் நேரடியாக சந்திக்கலாம்.