அடுத்த ஆண்டு முதல் அமெரிக்க சனாதிபதியாக ஆட்சி செய்யவுள்ள ரம்ப் மேலும் ஒரு உளறலை ஞாயிறு செய்துள்ளார். டென்மார்க்கின் (Denmark) அங்கமாக, ஆனால் சுதந்திரமாக இயங்கும் கிறீன்லாந்து (Greenland) அமெரிக்காவின் உரிமை ஆவது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பிரதானமானது என்றும் அதனால் அதை அமெரிக்கா கைக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி வழங்கிய கிறீன்லாந்து தீவின் பிரதமர் பிரதமர் Mute Egede கிறீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று கூறியுள்ளார். கிறீன்லாந்து தீவு கடந்த 600 ஆண்டுகளாக டென்மார்க்கின் உரிமையில், ஒரு சுதந்திர ஆட்சியாக உள்ளது. இங்கே பெருமளவு நிலம் பனி பாறையாகவே உள்ளது.
கிறீன்லாந்து தீவில் தற்போது அமெரிக்காவின் பெரியதோர் விமான படைத்தளம் உள்ளது. இந்த தீவில் பெருமளவு கனியங்கள், எரிபொருள், எரிவாயு ஆகியன உள்ளன.
2019ம் ஆண்டு தனது முதலாவது சனாதிபதி ஆட்சியில் இருந்த வேளையிலும் ரம்ப் இந்த கருத்தை வெளியிட்டு இருந்தவர்.
அதேவேளை கிறீன்லாந்து டென்மார்க்கில் இருந்து முழு சுதந்திரம் அடைய முயற்சிகளை செய்து வருகிறது. இங்கே சுமார் 56,000 மக்கள் வாழ்கின்றனர்.
சுமார் 6 மில்லியன் மக்களை கொண்ட டென்மார்க் 42 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பை மட்டும் கொண்டிருக்க, கிறீன்லாந்து 2,166 சதுர கிலோ மீட்டர் பரப்பை கொண்டுள்ளது.