ரம்பால் 3.3% உலக பொருளாதார வளர்ச்சி 2.8% ஆக குறையும்

ரம்பால் 3.3% உலக பொருளாதார வளர்ச்சி 2.8% ஆக குறையும்

அமெரிக்க சனாதிபதி ரம்ப் நடைமுறை செய்துவரும் இறக்குமதி வரி (tariff) யுத்தம் காரணமாக 2025ம் ஆண்டில் 3.3% வளர்ச்சியை கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்ட உலக பொருளாதாரம் 2.8% வளர்ச்சியை மட்டுமே கொண்டு இருக்கும் என்று IMF இன்று செவ்வாய் எச்சரித்து உள்ளது.

அது மட்டுமன்றி 2.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்ட 2025ம் ஆண்டுக்கான அமெரிக்க பொருளாதார வளர்ச்சியும் 1.8% ஆக மட்டுமே இருக்கும் என்றும் IMF கூறியுள்ளது.

சனாதிபதி ரம்ப் அமெரிக்க Federal Reserve என்ற மத்திய வங்கியின் ஆளுநர் Jerome Powell ஐ பதவியில் இருந்து விரட்டினால் அமெரிக்க பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.