நேற்று அமெரிக்காவில் இடம்பெற்ற மூன்று மாநில தேர்தல் முடிவுகள் ரம்பின் Republican கட்சிக்கு பலத்த தோல்விகளை வழங்கி உள்ளன. சனாதிபதி ரம்ப் மீதான வெறுப்பாலேயே அவர் சார்ந்த Republican கட்சியும் தோல்விகளை அடைந்துக்கலாம் என்று கருதப்படுகிறது.
.
Virginia மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தலில் Democritic கட்சி இரண்டு அவைகளிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இங்கே ரம்பின் செயற்பாடுகளுக்கு 30% ஆதரவு மட்டுமே தற்போது உள்ளது. இந்த மாநிலம் Republican கோட்டையாக பல சந்ததிகளுக்கு விளங்கியது.
.
Kentucky மாநிலத்திலும் Republican கட்சி பலத்த தோல்வியை அடைந்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் ரம்ப் இங்கு 30% மேலதிக வாக்குகளை பெற்றிருந்தார். ஆனால் இங்கும் அவரின் கட்சி நேற்று தோல்வியை அடைந்துள்ளது.
.
Mississippi மாநிலத்தில் மட்டும் ரம்பின் கட்சி தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளது. ஆனால் இங்கும் Republican கட்சிக்கு ஆதரவு வீழ்ந்துள்ளது. Republican கட்சியின் கோட்டையான இங்கு 2016 ஆண்டில் ரம்ப் 18% மேலதிக வாக்குகளை பெற்று இருந்தார். ஆனால் நேற்றைய கவர்னர் தேர்தலின் Republican கட்சி 5% மேலதிக வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தது.
.