அமெரிக்காவின் விருப்பத்துக்குரிய தெரிவை போலவே இந்தியாவும் ரணிலை செப்டம்பர் 21ம் திகதி மீண்டும் சனாதிபதி ஆக்க விரும்பி இருந்தது. ஆனால் ரணிலின் வெற்றிக்கான சாத்தியக்கூறு நலிவடைந்து செல்வதால் இந்தியா தனது Plan B யான சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு உழைக்கிறதா என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றன சில சந்திப்புகள்.
தேர்தலுக்கு 16 தினங்கள் மட்டும் இருக்கையில் ஊவா மாகாண ஆளுநர் Muzammil (முன்னாள் கொழும்பு மாநகர முதல்வர்) தனது பதவியை கைவிட்டு, அதே கணம் சஜித்துக்கு தனது ஆதரவை தெரிவித்தும் உள்ளார். இந்த இரண்டையும் செய்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் Muzammil இந்திய தூதுவர் Santosh Jha வை India House இல் சந்தித்து உரையாடி இருந்தார்.
இதற்கு 4 தினங்களுக்கு முன் இலங்கை தமிழரசு கட்சி சஜித்துக்கு தனது ஆதரவை தெரிவித்து இருந்தது. கடந்த கிழமையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Ajit Doval ஐ தமிழரசு கட்சி சந்தித்து உரையாடி இருந்தது.
இந்த சனாதிபதி தேர்தலில் எவரும் 50% க்கும் அதிகமான ‘முதலாம் விருப்பு” வாக்குகளை பெறுவது கடினம் ஆகலாம். அந்நிலை ஏற்படின் முதல் இருவர் பெறும் “இரண்டாம்”, “மூன்றாம்” விருப்பு வாக்குகளை கணிப்பில் எடுத்து சனாதிபதி செய்யப்படுவார்.