இந்தியாவின் தென் பகுதியில் உள்ள பல நிறுவனங்கள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை விடுமுறை செய்கின்றன. ரஜனியின் ‘கபாலி’ திரைப்படம் அன்றைய தினம் இந்தியாவில் வெளியிடப்படுவதே இதற்கு காரணம். இப்படம் சுமார் 12,000 திரைகளில் அன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது.
.
.
பணியாளர் பெருமளவில் சுகயீனம் என்று கூறி பணிக்கு வாராது விடுவார்கள் என்றும், தமது தொலைபேசிகளை துண்டித்து விடுவார்கள் என்றும் தாம் கருதுவதாக இந்த நிறுவனங்கள் கூறியுள்ளனவாம். அதனாலேயே தாம் முன்கூட்டியே விடுமுறை அறிவித்துள்ளதாக கூறியுள்ளன.
.
.
Air Asia விமான சேவை விசேட Kabali Flight ஒன்றை பங்களூரில் இருந்து சென்னைக்கு சேவையில் அமர்த்தவுள்ளது. இதில் 180 ரஜனி ரசிகர்கள் பணம் செய்து சென்னையில் கபாலி பார்க்கவுள்ளார்கள்.
.
.
வெளியீட்டுக்கு முன்னரே இத்திரைப்படம் சுமார் $30 மில்லியன் வருமானத்தை வெளியீட்டு உரிமைகள் மூலம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
.
இத்திரைப்படம் பின்னர் தெலுங்கு, இந்தி, மலே (மலேசியா) ஆகிய மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்படவுள்ளது.
.
.
அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் இத்திரைப்படம் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது.
.