ரஜனி இலங்கை வரும் தனது பயணத்தை இரத்து செய்துள்ளார். வரும் 9ஆம் திகதி ஞானம் அமைப்பால் (Gnanam Foundation) கட்டப்பட்ட 150 வீடுகளின் சாவிகளை உரியவர்களுக்கு வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவே இவர் இலங்கை வர இருந்தார். ஆனால் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ரஜனியின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதே இவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளார்.
.
.
ரஜனியின் இலங்கை பயணத்துக்கு இந்திய அரசியல்வாதிகளாக வைக்கோ மற்றும் திருமணவாளன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். ராஜனியோ தான் வைக்கோ மற்றும் திருமணவாளன் ஆகியோரின் கூற்றுக்களுடன் உடன்படவில்லை என்றும் ஆனால் இலங்கை நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.
.
.
Gnanam Foundation அமைப்பின் உரிமை நிறுவனமான Lyca இலங்கை அரசு சார்பு நிறுவனம் என்பதே எதிர்ப்பாளர்களின் முறைப்பாடு.
.
.
தான் ஒரு அரசியல்வாதி இல்லை என்றும், ஒரு நடிகர் மட்டுமே என்றும் கூறிய ரஜனி, எதிர்காலத்தில் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் இலங்கை செல்வேன் என்றுளார்.
.