யெமென் விமான நிலையத்தில் புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதலுக்கு குறைந்தது 25 பேர் பலியாகியும், 110 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். சவுதியில் இருந்து யெமெனை ஆழ வந்த சவுதி ஆதரவு கொண்ட யெமென் குழு மீதே இந்த தாக்குதல் செய்யப்பட்டு உள்ளது. இக்குழு பாதுகாப்பு கருதி சவுதியில் இருந்தே யெமெனை ஆட்சி செய்து வந்துள்ளது.
யெமெனில் இருந்து வந்திருந்த பிரதமர் தானும், தனது அமைச்சர்களும் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் ஈரான் ஆதரவு Houthi ஆயுத குழுக்களே தாக்குதலை செய்ததாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு சவுதி தனது ஆதவு கொண்ட யெமென் அரசை பாதுகாக்க இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்ததில் இருந்து இதுவரை சுமார் 110,000 பேர் இங்கு பலியாகி உள்ளனர்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தமது பணியாள் ஒருவர் இறந்தும், 3 பேர் காயப்படும், 2 பேர் தொலைந்தும் உள்ளதாக கூறியுள்ளது. இவர்கள் தாக்குதல் நேரத்தில் விமான நிலையத்தில் இருந்துள்ளனர்.
சவுதி-ஈரான் முரண்பாடு காரணமாகவே யெமனில் யுத்தம் தொடர்கிறது.