யெமெனில் தூக்கை நெருங்கும் கேரளா பெண்

யெமெனில் தூக்கை நெருங்கும் கேரளா பெண்

Nimisha Priya என்ற 34 வயதுடைய கேரளா பெண் யெமென் (Yemen) என்ற மத்திய கிழக்கு நாட்டில் கொலை ஒன்று காரணமாக விரைவில் தூக்கில் இடப்பட உள்ளார். தற்போது மரணித்தவரின் குடும்பம் மட்டுமே இந்த குற்றத்தை மன்னித்து தூக்கை தடுக்கலாம்.

வறுமை காரணமாக பிரியா தனது 19ம் வயதில் யெமெனில் வீட்டு பணிப்பெண் தொழில் செய்ய சென்றார். பின் அவர் அங்கு மருத்துவ தாதி ஆனார். 2011ம் ஆண்டு இந்தியா திரும்பிய இவர் தோமஸ் என்ற ஆட்டோ சாரதி ஒருவரை திருமணம் செய்து இருவரும் யெமென் சென்றனர்.

யெமெனில் போதிய வருமானம் இல்லாமையால் கணவனும், இவர்களின் பெண் குழந்தையும் இந்தியா திரும்பினார்.

Priya யெமென் நாட்டவரான Mahdi என்பவருடன் இணைந்து கிளினிக் ஒன்றை ஆரம்பித்தார். ஆனால் 2014ல் யுத்தம் ஆரம்பமாக Priya நெருக்கடிகளுக்கு உள்ளானார்.

Mahdi தனது கடவுச்சீட்டை கொண்டிருந்தமையால் அதை பறிக்க Priya தனது வர்த்தக கூட்டான Mahdi க்கு மயக்க மருந்து வழங்கினார். ஆனால் மயக்க மருந்தின் அளவு கூடியதால் Mahdi மரணமானார். 2017ம் ஆண்டு இவரின் துண்டாடப்பட்ட உடல் நீர் தொட்டி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. பிரியா கைது செய்யப்பட்டார்.

இஸ்லாமிய சட்டப்படி பாதிக்கப்பட்டவர் குடும்பம் மன்னிப்பு வழங்கலாம். அத்துடன் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு diyah வழங்கப்படலாம். பிரியாவுக்கு மன்னிப்பு வாழங்கினால் Mahdi குடும்பத்துக்கு diyah வழங்க $40,000 பணம் சேர்க்கப்படுள்ளது. 

யெமெனுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நல்ல உறவு இல்லை என்றாலும், ஈரான் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது.

இவரின் மக்களுக்கு தற்போது வயது 13.