அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் கடத்தி சென்ற யூத கைதிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபாடுள்ள இஸ்ரேல் இராணுவ 3 கைதிகளை சுட்டு கொன்றுள்ளது. தாம் கைதிகளை ஹமாஸ் உறுப்பினர் என்று தவறாக அடையாளம் கண்டதே அவர்களின் கொலைகளுக்கு காரணம் என்கிறது இஸ்ரேல்.
Yotam Haim (வயது 28), Samer Talalka (வயது 22), Alon Shamriz (வயது 26) ஆகியோரே பலியாகி உள்ளனர்.
இரு தரப்பிலும் சில கைதிகள் விடுவிக்கப்பட்டு இருந்தாலும், 100 க்கும் அதிகமான யூத கைதிகள் தற்போதும் ஹமாஸ் வசம் உள்ளனர்.
சுமார் 18,000 பலஸ்தீனர் பலியான வேளையில் கவலை கொள்ளாத வெள்ளை மாளிகை மேற்படி 3 மரணங்கள் “heartbreaking” கவலையை தமக்கு ஏற்படுத்தியதாக கூறியுள்ளது.