யூக்கிறேனில் இடம்பெறும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சீனா சனாதிபதி சீயின் உதவியை நாடியுள்ளார் பிரஞ்சு சனாதிபதி மக்கிறான். தற்போது சீனாவுக்கு 3-தின பயணத்தை மேற்கொண்டுள்ள பிரஞ்சு சனாதிபதிக்கு சீனாவில் முழு அளவிலான மரியாதை வழங்கப்படுள்ளது.
பூட்டினை பேச்சுக்கு அழைக்க சீயால் முடியும் என்று தான் கருதுவதாக மக்கிறான் கூறியுள்ளார்.
அமெரிக்கா யூக்கிறேன் யுத்தம் தொடர்வதை விரும்பினாலும், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் யுத்தத்தை விரைவில் நிறுத்த விரும்புகின்றன.
அதேவேளை மக்கிறான் சீனாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவையும் வலுவடைய செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.
ஐரோப்பாவின் விமான தயாரிப்பு நிறுவனமான Airbus தனது இரண்டாவது விமான கட்டுமான நிலையத்தை சீனாவின் TianJin நகரில் கட்ட உள்ளது. முதலாவது விமான கட்டுமான நிலையம் TianJin நகரில் 2008ம் ஆண்டு கட்டப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டு சீன Airbus தொழில்சாலை மாதம் ஒன்றில் 45 விமானங்களை தயாரித்தது எனவும், 2026ம் ஆண்டில் அது மாதம் ஒன்றில் 75 விமானங்களை தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
மக்கிறானுடன் ஐரோப்பிய ஒன்றிய Commission அமைப்பின் Ursula von Leyen உம் சீனா சென்றுள்ளார்.