சுமார் இரண்டு ஆண்டுகளாக யுத்தத்தில் மாண்டுள்ள யூக்கிறேனில் இருந்து 18 வயது முதல் 60 வயது வரையான ஆண்கள் பெருமளவில் மேற்கு நாடுகளை நோக்கி தப்பி ஓடுகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா ஆக்கிரமித்த பின் யூக்கிறேன் 18 வயது முதல் 60 வயது வரையானோர் நாட்டை விட்டு வெளியேறுவது தடை செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் கட்டாய இராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டனர்.
ஆனால் இறுதி முடிவு எதுவென்று தெரியாத யுத்தத்தில் இணைய விரும்பாமலே மேற்படி ஆண்கள் தப்பி ஓடுகின்றனர்.
யூக்கிறேனுடன் நீண்ட எல்லைகளை கொண்ட மால்டோவா, ருமேனியா ஆகிய இரண்டு நாடுகளுக்குமே அதிகமானோர் தப்பி ஓடினாலும், Slovakia, Hungary ஆகிய நாடுகளுக்கும் சிலர் சென்றுள்ளனர்.
ரஷ்யாவிலும் இவ்வகை நிலை இருந்தது.