யுத்த விமானத்தை இழந்த இஸ்ரவேல் ஈரான் மீது பாய்ச்சல்

Syria

சனிக்கிழமை இஸ்ரவேல் வான்படைக்கு சொந்தமான நவீன வகை F-16 யுத்த விமானம் ஒன்று சிரியாவின் எல்லை பகுதில் விமான எதிர்ப்பு ஆயுதங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருந்தது. பெரும்பாலும் இந்த தாக்குதல் ஈரானின் உதவியுடனேயே இடம்பெற்று இருக்கலாம் என்று கருதும் இஸ்ரவேல், ஈரான் மீது கண்டன கருத்துக்களை வெளியிட்டு உள்ளது.
.
கடந்த 36 வருடங்களின் பின் இவ்வாறு இஸ்ரவேலில் யுத்த விமானம் ஒன்று சுட்டு வீழத்தப்பட்டது இதுவே முதல் தடவை. இவ்விடயம் இதுவரை இருந்த இஸ்ரவேலின் வான்பரப்பு ஆதிக்கத்தை கேள்விக்குறி ஆகியுள்ளது.
.
முதலில் சிரியாவில் நிலைகொண்டுள்ள ஈரானின் ஆளில்லா வேவு விமானம் ஒன்று (drone) இஸ்ரவேலின் எல்லைக்குள் புகுந்ததாகவும், அதை இஸ்ரவேலின் ஹெலி ஒன்று சுட்டு வீழ்தியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னரேயே இஸ்ரவேலின் F-16 சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது.
.
சுடப்பட்ட விமானம் இஸ்ரவேலின் Kibbutz Harduf என்ற பகுதியில் வீழ்ந்து எரிந்துள்ளது. விமானி காயங்களுடன் தப்பி உள்ளார்.
.
ஈரானும், ரஷ்யாவும் சிரியாவின் அரசுக்கு உதவ சிரியாவில் நிலைகொண்டுள்ளார்.
.

படிப்படியாக இஸ்ரவேலும், ஈரானும் நேரடி மோதலுக்கு தள்ளப்படலாம் என்றும், அது அப்பகுதியில் இடம்பெறும் மற்றைய மோதல்களை மேலும் குழப்பம் அடைய செய்யும் என்றும் அமெரிக்காவும், ரஷ்யாவும் கருத்து வெளியிட்டுள்ளன.
.