யுத்த நிறுத்தத்தை முறித்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் 

யுத்த நிறுத்தத்தை முறித்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் 

இஸ்ரேல் அவ்வப்போது யுத்த நிறுத்தத்துக்கு செல்வது முடிந்த அளவு ஹமாஸின் கைகளில் உள்ள இஸ்ரேலியரை கைக்கொள்ளவே. இதை இஸ்ரேல் பல தடவைகள் செய்துள்ளது. இன்று செவ்வாய் அதிகாலையும் இஸ்ரேல் தான் இணங்கிக்கொண்ட யுத்த நிறுத்தத்தை மீறி காசா மீது மீண்டும் தாக்கத்தலை ஆரம்பித்து உள்ளது.

கடந்த யுத்த நிறுத்த நாடகத்திலும் இஸ்ரேல் பல இஸ்ரேல் கைதிகளை ஹமாஸிடம் இருந்து பெற்றுள்ளது.

உலகுக்கு மனித நேய பாடம் புகட்டும் நரிக்குணம் கொண்ட மேற்கு நாடுகள் தன் கையில் இருப்பதால் இஸ்ரேல் எதையும் செய்யலாம். உண்மையில் யூக்கிறேன் மக்கள் படும் அவலத்திலும் பல மடங்கு கொடூரமானது காசா மக்கள் படும் அவலம். அப்படியிருக்க யூகிறேனுக்கு அழும் NATO மற்றும் ஐரோப்பிய நாடுகள் காசாவில் எரியும் தீக்கு எண்ணெய் ஊத்துகிறார்கள்.

இன்றைய இஸ்ரேலின் தாக்குதலுக்கு சிறுவர்கள் உட்பட குறைந்தது 66 பேர் காசாவில் பலியானதாக கூறப்படுகிறது.

காசா தாக்குதலுக்கு முன் இஸ்ரேல் ரம்பிடம் கதைத்து அனுமதி பெற்றதாம்.