யுக்ரேனை ரஷ்யா ஆக்கிரமிக்க ஆரம்பித்த காலம் முதல் கருங்கடலில் உள்ள யுக்ரேனின் துறைமுகங்கள் ரஷ்யாவின் தடையில் உள்ளன. அதனால் யுக்ரேன் தனது தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது உள்ளது. ஆனால் தற்போது ஐ.நா. வும், துருக்கியும் ஒரு இணைக்க நிலையை ஏற்படுத்தி யுக்ரேனின் தானியத்தை ஏற்றுமதி செய்ய முனைகின்றன.
உலகம் எங்கும் தற்போது தானியங்களுக்கு தட்டுப்பாடு இருந்தாலும் யுக்ரேனில் தற்போது சுமார் 20 மில்லியன் தொன் தானியங்கள் தடையால் முடங்கி உள்ளது.
துருக்கியின் முயற்சி கைகூடுமா என்பதுவும் கேள்விக்குறியே. இந்த முயற்சிக்கு பல இடர்கள் உள்ளன.
ஏற்றுமதியை ஆரம்பிக்க கடலில் ரஷ்யா புதைத்த கடல் கண்ணி வெடிகளையும், ரஷ்யா கரையை அடைவதை தடுக்க யுக்ரேன் புதைத்த கரையோர நில கண்ணி வெடிகளையும் அகற்ற வேண்டும். அதை சுமார் இரண்டு கிழமைகளில் செய்யும் வளமை துருக்கியிடம் உண்டு. துருக்கியிடம் 11 கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் உண்டு.
ஆனால் யுக்ரேன் தான் பதித்த கரையோர கண்ணிவெடிகளை அகற்ற பயப்படக்கூடும். கரையோரம் பாதுகாப்பை இழந்தால் ரஷ்யா இலகுவில் நுழையக்கூடும்.
அத்துடன் ஏற்றுமதி செய்யப்படும் தானியங்களின் வருமதியை யார் பெறுவது என்பதிலும் சிக்கல் உண்டும். பெருமளவு தானியம் தற்போது ரஷ்யா ஆக்கிரமித்து உள்ள பகுதிகளில் இருந்து வருகின்றன.
ரயில் மூலம் தானியங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் ஒரு இடர் உண்டு. யூகிரைன் ரயில் பாதையின் அகலமும் ஐரோப்பிய ரயில் பாதையின் அகலமும் ஒன்றல்ல. அதனால் தானியங்களை எல்லையில் இறக்கி ஐரோப்பிய ரயிலுக்கு ஏற்ற வேண்டும். அதற்கான வசதிகளும் தற்போது இல்லை.
யூகிரேனும், ரஷ்யாவும் பெருமளவு உரங்களையும், சமையல் எண்ணெய்யையும் ஏற்றுமதி செய்கின்றன. யுத்தத்தால் அவையும் தற்போது முடங்கி உள்ளன.