இந்திய பிரதமர் மோதியின் ஆட்சி காலத்தில் அங்கு வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்து உள்ளதாக அண்மையில் வெளிவந்த தரவுகள் கூறுகின்றன. இந்த உண்மை வரும் மே மாதம் இந்தியாவில் இடம்பெறவுள்ள தேர்தலில் மோதியை பெரிதும் பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது.
.
அரச ஆதரவில் இயங்கும் National Statistical Commission தனது கூற்றில், 2017-2018 காலத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பு இன்மை 6.1% என்றும் அது கடந்த 45 வருட காலத்தில் மிக அதிக வேலைவாய்ப்பு இன்மை என்றும் கூறியுள்ளது.
.
இதற்கு முன்னர் Center for Monitoring Indian Economy என்ற அமைப்பு இந்தியா 1.5 மில்லியன் வேலைகளை 2017 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் இழந்துள்ளது என்றும் கூறியுள்ளது.
.
பிரதேச அடிப்படையில் பார்க்கையில், நகர்ப்புற வேலைவாய்ப்பு இன்மை 7.8% ஆகவும், கிராமப்புற வீதம் 5.3% ஆகவும் இருந்துள்ளது.
.
நகர்ப்புறத்தில் 15 வயது முதல் 29 வயதுடையோருள் வேலைவாய்ப்பு இன்மை 18.7% ஆக இருந்துள்ளது. 2011-2012 ஆண்டு காலத்தில் இந்த வகையினரின் வேலைவாய்ப்பு இன்மை 8.1% ஆக மட்டுமே இருந்துள்ளது.
.
2014 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தான் வருடம் ஒன்றுக்கு 10 மில்லியன் வேலைகளை உருவாக்க உள்ளதாக வேட்பாளர் மோதி கூறி இருந்தார்.
.
சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ராகுல் காந்தி, மோதியின் ஆட்சி மீது தாக்குதல்களை ஆரம்பித்து உள்ளார்.
.