இன்று புதன்கிழமை இந்திய பிரதமர் மோதி தனது அமைச்சரவையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். அமைச்சரவையின் அளவும் ஊதி பெருத்துள்ளது.
இதுவரை 52 அமைச்சர்களை மட்டுமே கொண்டிருந்த அமைச்சரவை தற்போது 77 அமைச்சர்களை கொண்டதாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதாவது புதிதாக 25 அமைச்சுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அது சுமார் 48% அதிகரிப்பு.
அத்துடன் சுமார் 12 பழைய அமைச்சர்கள் விரட்டப்பட்டு, புதியவர்கள் அமைச்சர்கள் ஆக்கப்பட்டும் உள்ளனர். அதனால் புதிய அமைச்சரவையில் சுமார் 37 பேர் புதியவர்கள் ஆக இருப்பார்.
குறிப்பாக சுகாதார அமைச்சர் Harsh Vardhan தனது அமைச்சர் பதவியை இழந்து உள்ளார். கரோனா தடுப்பு தொடர்பாக பா.ஜ. மீது ஏற்பட்ட எதிர்ப்புக்கு இவர் இலக்காகி உள்ளார். இதை நையாண்டி செய்த காங்கிரசின் சிதம்பரம் அமைச்சரவையில் வெற்றி என்றால் அது மோதிக்கு போகும், தோல்வி என்றால் அது அமச்சருக்கு போகும் என்றுள்ளார்.
Ravi Shangkar Prasad என்ற IT (தொழில்நுட்ப) அமைச்சரும் தனது அமைச்சர் பதவியை இழந்து உள்ளார். இவர் Facebook, Twitter போன்ற இணையங்கள் மீது கடுமையான விதிகளை சட்டமாக்கியவர்.
சுற்றாடல் அமைச்சர் Prakash Javadekar, கல்வி அமைச்சர் Ramesh Pokhriyal Nishank ஆகியோருக்கும் அமைச்சர் பதவிகளை இழந்து உள்ளனர்.
காங்கிரசில் இருந்து பா.ஜ.வுக்கு கட்சி தாவிய Jyotiraditya Scindia, முன்னாள் அசாம் முதலமைச்சர் Sarbananda Sonowal, முன்னாள் காங்கிரஸ் அதிகாரி Narayan Rane ஆகியோர் புதிய அமைச்சர்களுள் சிலர்.
புதிய அமைச்சர்களை நோக்கையில், புதிய அமைச்சரவை 2022ம் ஆண்டு வரவுள்ள தேர்தலை கருத்தில் கொண்டே அமைக்கப்பட்டது என்பது புலனாகிறது. 2022ம் ஆண்டில் உத்தர பிரதேசம், Uttarakhand, மணிப்பூர், புஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தேர்தல்கள் இடம்பெறும்.