இலங்கையில் அமைக்கப்படவுள்ள 500 MW மின் உற்பத்தி திட்டம் ஒன்றை இந்திய பிரதமர் மோதியின் வேண்டுகோளுக்கு இணங்க மோதியின் நண்பரான அடானிக்கு (Adani Group) போட்டி எதுவும் இன்றி வழங்குமாறு சனாதிபதி கோத்தபாய பணித்தாக இலங்கை மின்சார சபையின் (CEB) Chairman M. M. C. Ferdinando கூறியுள்ளார்.
Committee of Enterprises (COPE) என்ற இலங்கை பாராளுமன்ற கண்காணிப்பு அமைப்புக்கே Ferdinando மேற்கண்டவாறு கூறியிருந்தார். தன்னை 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி சனாதிபதி அழைத்து மேற்படி விருப்பத்தை கூறியதாக Ferdinando கூறியிருந்தார்.
ஆனாலும் கோத்தபாய அதை மறுத்து உள்ளார். அது மட்டுமன்றி Ferdinando வும் தனது கூற்றை தற்போது பின்வாங்கி உள்ளார்.
மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் அமைக்கப்படவுள்ள காற்று மூலமான (wind power) மின் உற்பத்தி திட்டமே இங்கு சர்சைக்கு உரியதாகிறது.
இவ்வாறான பின்கதவு இணக்கங்களுக்கு வசதியாக 1989ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த Sri Lanka Electricity Act கடந்த வெள்ளிக்கிழமை amendment மூலம் பாராளுமன்றத்தில் மாற்றப்பட்டு உள்ளது. தற்போது போட்டிகள் (bidding) இன்றி யாருக்கும், எந்த தொகைக்கும் திட்டங்கள் வழங்கப்படலாம்.
முதலில் அடானி அழகு ஒன்றுக்கு $6.50 விலைப்படி CEB க்கு மின்னை விற்பனை செய்ய இருந்ததாகவும், தற்போது அது அழகு ஒன்றுக்கு $7.55 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொழும்பு West Container Terminal திட்டமும் அடானிக்கே வழங்கப்பட்டு உள்ளது.