ஆபிரிக்க நாடான மொசாம்பிகில் பார வாகனம் ஒன்று இழுத்து சென்ற கொள்கலம் ஒன்றை சோதனை இட்ட மொசாம்பிக் போலீசார் அதனுள் 64 உடல்களையும், 14 பேரை உயிருடனும் கைப்பற்றி உள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் ஆண்கள்.
.
எதியோப்பியா (Ethiopia) என்ற நாட்டின் ஆண்களே அகதிகளாக தென் ஆபிரிக்கா செல்ல முனைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
.
அந்த பார வாகனத்தின் சாரதியும், அகதிகள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இனொருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர்.
.
கடத்தலுக்கு ஊதியமாக தனக்கு $500 வழங்கப்படும் என்று கூறப்பட்டதாக சாரதி போலீசாருக்கு கூறி உள்ளார்.
.
கொள்கலம் இருந்த இடத்தில் வெப்பநிலை 34 C ஆக இருந்ததாக கூறப்படுகிறது.
.
தப்பிய 14 பேருக்கும் International Organization for Migration உதவிகளை செய்து வருகிறது.
.