மொசாம்பிக் அரசில் 30,000 மாய ஊழியர்கள்

Mozambique

ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கில் (Mozambique) சுமார் 30,000 மாய ஊழியர்கள் அரச ஊதியம் பெற்று வந்துள்ளமை அறியப்பட்டுள்ளது. அரச ஊதியம் பெற்றுவந்த இந்த ஊழியர்கள் உண்மையில் ஏற்கனவே மரணித்தவர்கள், அல்லது பொய்யாக உருவாக்கப்பட்டவர்கள்.
.
2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை அந்நாட்டு அரசு தமது திணைக்களங்களில் தொழில்புரியும் ஊழியர்களின் திறன்களை அறியும் நோக்கில் தகவல் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அப்போதே இந்த மாய ஊழியர் விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
.
இந்த மாய ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த ஊதியம் சுமார் $250 மில்லியன் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது. அந்நாட்டு அரசின் செலவுகளில் சுமார் 55% அரச ஊழியர்களின் ஊதியங்களில் செலவாகிறது.
.
2017 ஆம் ஆண்டு Transparency International நடாத்திய கணிப்பீட்டில், மொத்தம் 180 நாடுகளுள், மொசாம்பிக் 153 ஆம் இடத்தில் இருந்துள்ளது.

.