ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கை (Mozambique) கடந்த வியாழன் தாக்கிய Idai என்ற சூறாவளிக்கு சுமார் 1,000 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த சூறாவளி Beira என்ற நகரை 177 km/h காற்று வீச்சில் தாக்கி உள்ளது.
.
சுமார் 500,000 மக்களை கொண்ட Beira நகரில் உள்ள அனைத்து கட்டிடங்களும் எதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறுகிறது ஐ.நா.
.
இந்த நகருக்கும் நாட்டின் மற்றைய பகுதிகளுக்குமான பாதைகளும் முற்றாக அழிந்துள்ளன. அதனால் உதவிகள் செல்வதும் தாமதமாகி உள்ளன.
.
Doctors Without Borders தனது கூற்றில், ஆறுகள் மேவி பாய்ந்ததால், வீடுகள் நீருள் அமிழ்ந்து, சுமார் 11,000 பேர் Nsanje என்ற நகரில் மட்டும் இடம்பெயர்ந்து உள்ளனர்.
.
இந்த சூறாவளி சிம்பாப்வேயையும் (Zimbabwe) தாக்கி உள்ளது. அங்கு சுமார் 100 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் சுமார் 215 பேரை காணவில்லை.
.